சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

McDonald's, Seoul Garden outlets among locations added to list of places visited by COVID-19 cases

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில், உணவகங்கள் இடம்பெற்றுள்ளதாக MOH தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சம்பளக் குறைப்பு காரணமாக 35 முதல் 44 வயதுக்குட்பட்ட ஊழியர்கள் கடுமையாக பாதிப்பு..!

புதிய பட்டியல்:
  • Bugis Junction-இல் உள்ள Seoul Garden உணவகம்
  • புக்கிட் பாத்தோக்கில் உள்ள McDonald’s உணவகம்
  • காலாங் Wave Mall
  • Guoco Towerஇல் உள்ள உணவகம்
  • உட்லண்ட்ஸ் 888 பிளாசாவில் உள்ள Wan Shun உணவங்காடி
பார்வையிட்ட நேரம்:

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை, பாதிக்கப்பட்டவர்கள் Seoul Garden உணவகம் சென்றுள்ளனர்.

மேலும், கடந்த ஆகஸ்ட் 15 மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை, பாதிக்கப்பட்டவர்கள் McDonald’s உணவகம் சென்றுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

அதே போல், ஆகஸ்ட் 7ஆம் தேதி காலாங் Wave Mall, ஆகஸ்ட் 8 அன்று Guoco Towerஇல் உள்ள உணவகம் மற்றும் Wan Shun உணவங்காடி ஆகஸ்ட் 9 அன்று பாதிக்கப்பட்டவர்கள் சென்று வந்துள்ளனர்.

(Table: MOH)

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஊழியர்களை ஆள்குறைப்பு செய்யவுள்ள சிங்கப்பூர் SPH..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg