ஜனவரி முதல் சிங்கப்பூர் வரும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு கட்டாயம்

Medical insurance Workers
(Photo: Reuters)

நாளை முதல் (ஜனவரி 1) சிங்கப்பூருக்குள் வரும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முதலாளிகள் எடுத்திருக்க வேண்டும்.

ஊழியர்களுக்கு குறைந்தது S$10,000 மருத்துவக் காப்பீட்டை முதலாளிகள் எடுத்திருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.

சட்டவிரோத குழுக்களின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 75 பேர் கைது

அதாவது அந்த ஊழியர்கள் நாட்டிற்குள் வருவதற்கு முன்பே முதலாளிகள் காப்பீடு எடுத்திருக்க வேண்டும்.

வேலை அனுமதி அட்டை, S pass அட்டை வைத்திருப்போருக்கு இது பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வீட்டுப் பணிப்பெண்கள், மகப்பேறு பராமரிப்பு சேவையாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

அந்த காப்பீட்டு திட்டம் சிங்கப்பூர் வந்து தங்கியிருக்கும் 14 நாள்களில், ஊழியர்களுக்கு ஏதேனும் தொற்று அறிகுறி அல்லது கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டாலோ அதில் ஆகும் மருத்துவச் செலவை ஈடுசெய்ய இது உதவும்.

Source: Seithi MediaCorp

பிளாட்டின் 10வது மாடியில் இருந்து விழுந்த இளம் பெண்…

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…