சிங்கப்பூரின் 2ஆம் கட்டத் தளர்வு – தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மனிதவள அமைச்சகம் அறிவுரை..!

சிங்கப்பூரின் இரண்டாம் கட்ட தளர்வு நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தொடங்கும் நிலையில், வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது ஓய்வு நாட்களில் தொடர்ந்து தங்கும் விடுதிகளில் இருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

புதிதாக COVID-19 நோய்த்தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்த பயணிகளுக்கு COVID-19 சோதனைகளின் கட்டணம் தள்ளுபடி..!

சமூகம் மற்றும் தங்கும் விடுதிகள் இரண்டிலும் தொற்று வீதங்கள் நீண்ட காலத்திற்கு குறைந்த மட்டத்தில் இருக்கும் பட்சத்தில், ​​COVID-19 இல்லாத இடங்களில் தங்கியிருக்கும் ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு மற்றும் தினசரி தேவைகள் தங்கள் ஊழியர்களுக்கு தங்கும் விடுதிகளில் வழங்கப்படுவதை முதலாளிகள் தொடர்ந்து உறுதிசெய்ய வேண்டும்.

சிங்கப்பூரின் இரண்டாம் கட்ட தளர்வு தொடங்க உள்ள நிலையில், பெரும்பாலான வணிக மற்றும் சமூக நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் திங்களன்று அறிவித்திருந்தனர்.

தற்போது சுமார் 75,000 ஊழியர்கள் வேலை இடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட நபர்களில் 94 சதவீதம் பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டத் தளர்வு – மீண்டும் திறக்கப்படவுள்ள விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள்…!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg