தகுதியுடைய வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்லலாம்..!

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்
(PHOTO: Roslan Rahman/ AFP /Getty Images)

COVID-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி குடியிருப்பாளர்களும் சனிக்கிழமை (அக். 31) முதல் விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்ல முடியும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அதாவது அவர்கள் நடப்பில் COVID-19 பாதிப்பு இல்லாத தங்கும் விடுதிகளில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சோதனை சாவடிகளில் கருவிழி மற்றும் முக ஸ்கேன் முறை கொண்டு வர திட்டம்.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக, சுமார் 300 தங்கும் விடுதிகளை சேர்ந்த 30,000 ஊழியர்கள் தங்கள் ஓய்வு நாட்களில் பொழுதுபோக்கு மையங்களுக்கு சோதனையாக அனுமதிக்கப்பட்டனர்.

சிங்கப்பூர் முழுவதும் எட்டு பொழுதுபோக்கு மையங்கள் வார இறுதிக்குள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் காலை மூன்று மணி முதல் இரவு 11 மணி வரை, ஐந்தில் ஒரு மூன்று மணி நேர அனுமதியை தேர்வு செய்யலாம்.

இந்த மையங்களில், அவர்கள் மளிகை சாமான்களை வாங்கவும், பணத்தை அனுப்பவும், முடி திருத்தம் செய்யவும், தங்கள் நண்பர்களுடன் உணவருந்தவும் முடியும்.

மேலும், அங்கு COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊழியர்கள் கடைபிடிப்பதை உறுதிசெய்ய பாதுகாப்பு இடைவெளி அதிகாரிகள் இருப்பார்கள்.

ஊழியர்கள் SGWorkPass செயலி மூலம் 7 நாள்களுக்கு முன்பு வரைபொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்வதற்குப் பதிவு செய்யலாம்.

குறிப்பிட்ட 9 நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் குறித்த அறிவிப்பு.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…