கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதில் சிங்கப்பூர் இதுவரை எந்த அளவுக்குப் பங்களித்துள்ளது?- நாடாளுமன்றத்தில் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Singapore Minister Vivian Balakrishnan Official Facebook Page

சிங்கப்பூர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்டத் துறை ரீதியான அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று (10/01/2022) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் (Sylvia Lim), வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனிடம், உலக அளவிலும் பிராந்திய அளவிலும் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதில் சிங்கப்பூர் இதுவரை எந்த அளவுக்குப் பங்களித்துள்ளது? உலகளவில் மற்றும் பிராந்திய ரீதியாக, கோவாக்ஸ் அல்லது இருதரப்பு முயற்சிகள் மூலம் 2022-ல் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதற்கு சிங்கப்பூர் சர்வதேச அளவில் மேலும் என்ன பங்களிப்பைச் செய்யும்? என்று கேள்வி எழுப்பினார்.

“பேருந்து சேவை 35 புதிய பாதைக்கு திருப்பி விடப்படும்”- எஸ்பிஎஸ் டிரான்ஸிட் அறிவிப்பு!

உறுப்பினரின் கேள்விக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “நாம் ஒரு சிறிய நாடாக இருந்தாலும், கோவிட்-19க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் பங்களிக்க வேண்டியதன் அவசியத்தை சிங்கப்பூர் அங்கீகரிக்கிறது. தொற்றுநோய்க்கு அனைத்து நாடுகளும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும், இதன் மூலம் நாம் அனைவரும் தொற்றுநோயிலிருந்து விரைவாகவும், உலகளாவிய சமூகமாக மீள்வதற்கும் வெளிவர முடியும்.

கோவிட்-19ஐச் சமாளிப்பதற்கான உலகளாவிய மற்றும் பிராந்திய முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். கடந்த 2019- ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் முதல் மூன்று வருட காலத்திற்கு உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization- ‘WHO’) நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளது. மேலும் ‘COVAX’ அட்வான்ஸ் மார்க்கெட் அர்ப்பணிப்பு மற்றும் COVID-19 ASEAN Response Fund ஆகியவற்றிற்கு நாம் பங்களித்துள்ளோம்.

ஆசியான் மனித உரிமைகள் ஆணையத்தின் சிங்கப்பூரின் பிரதிநிதியாக டாக்டர் சஷி ஜெயக்குமார் மீண்டும் நியமனம்!

நமது பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்குத் தேவைப்படும், காலங்களில் சிங்கப்பூர் அரசாங்கம் தடுப்பூசிகளின் பங்களிப்புகளைப் பற்றியும் உறுப்பினர்கள் அறிந்திருப்பார்கள். கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூலை மாதம், கோவாக்ஸ் முன்முயற்சியின் கீழ் சிங்கப்பூர் தடுப்பூசி ஒதுக்கீட்டை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.

மேலும், ‘COVID-19 ASEAN Response Fund’- யின் கீழ் நமது தடுப்பூசிகளை மற்ற ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் சிங்கப்பூர் பங்களித்துள்ளதாக கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் அறிவித்தார்.

AYE சாலையில் தீப்பிடித்து எரிந்த Porsche கார் (வீடியோ): தீயை அணைக்க போராடிய SCDF

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 1,22,400 டோஸ்கள் உட்பட, COVAX முன்முயற்சியின் கீழ் வாங்கப்பட்ட தடுப்பூசிகளை, ரியாவ் தீவுகள், நமது அண்டை நாடுகளுடன் பகிர்ந்துள்ளோம். மேலும் அண்டை நாடுகளுக்கு தடுப்பூசி அளவை மேலும் நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

COVAX முன்முயற்சியின் கீழ் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதுடன், புரூணைக்கு 1,00,000 மாடர்னா தடுப்பூசியை வழங்கியுள்ளோம்; சினோவாக் தடுப்பூசியின் 20,000 டோஸ்கள் மற்றும் ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசியின் 1,00,000 டோஸ்கள் ஜோகூருக்கு வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.