“தனது நண்பரை காப்பற்ற முயன்றபோது கடலில் அடித்துச்செல்லப்பட்டார்..” – காணாமல் போனவர் குறித்த தகவல்

missing coast Sentosa kayaker
Google Street View

செந்தோசா தீவில் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வந்ததாக நாம் முன்னர் குறிப்பிட்டு இருந்தோம்.

இந்நிலையில், தன்னுடைய சக படகோட்டியை காப்பாற்ற முயன்றபோது காணாமல் போன அந்த பெண் படகோட்டி கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

“இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பணிபெண்களுக்கு கட்டுப்பிடியாகும் கட்டணம்” – ஏஜென்சிகளின் விளம்பரம்

இதனை தேடுதல் நடவடிக்கையில் உதவிய திரு சிம் செர் ஹூய் என்பவர் CNA க்கு தெரிவித்தார்.

நேற்று (அக்.22) காலை 10.25 மணியளவில் செந்தோசா தீவின் கடற்கரையில் காணாமல் போன கயாக் படகோட்டி குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் செந்தோசாவின் தெற்கு முனையில் கயாக் ஆடவர் படகு கவிழ்ந்தது.

பின்னர் அவரை காப்பாற்ற சென்ற பெண்ணும் கடலில் கவிழ்ந்ததாக அவர் CNA இடம் கூறினார்.

இருவரும் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், ஆடவர் மட்டும் ஒரு படகு மூலம் மீட்கப்பட்டார்.

காணாமல் போன பெண்ணை தேடும் பணி நடந்து வருகிறது என்று கடல் மற்றும் துறைமுக ஆணையம் தனது சமீபத்திய புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

செந்தோசா தீவில் ஆடவரை காணவில்லை – தேடும் பணி தீவிரம்

63 வயதான ஊழியர்.. “மேம்பாலத்தில் ஏறி போக 20 நிமிஷம் ஆகுது” இயலாத நிலையிலும் அயராது உழைக்கும் உழைப்பாளி!