தங்கும் விடுதியில் மேலும் ஒரு நோய் பரவல் குழுமம் அடையாளம் – 500க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 509 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 25,877 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதுகாப்பு விதிகளை மீறிய 5 வணிக நிறுவனங்கள் மற்றும் 53 தனி நபர்களுக்கு அபராதம்..!

மேலும் 248 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 12,364 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் மேலும் ஒரு புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது, 145 Tuas View Square என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு சிறப்பு விமானம்..!