சிங்கப்பூரில் பாதுகாப்பு விதிகளை மீறிய 5 வணிக நிறுவனங்கள் மற்றும் 53 தனி நபர்களுக்கு அபராதம்..!

5 businesses, 53 people fined for COVID-19 breaches in first week of Phase 1 reopening
5 businesses, 53 people fined for COVID-19 breaches in first week of Phase 1 reopening (Photo: STB)

சிங்கப்பூரில் சர்க்யூட் பிரேக்கர் என்னும் அதிரடி நடவடிக்கை முதல் கட்டமாக தகர்த்தப்பட்ட முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து மொத்தம் 58 வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 2 முதல் ஜூன் 8 வரை வேலையிடங்கள், மால்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் முழுவதும் அமலாக்க சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (ESG) மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) ஆகியவை தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்ணை தாக்கியதாக தம்பதி மீது குற்றசாட்டு..!

இதில் சில்லறை, உணவு மற்றும் உற்பத்தித் தொழில்களில் உள்ள ஐந்து வணிகங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதற்காக தலா S$1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வேலையிடங்கள் மற்றும் கடை முனைகளில் பாதுகாப்பான இடைவெளியை உறுதி செய்ய தவறியது, அத்துடன் வாய்ப்பிருந்தும் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு ஊழியர்களை அனுமதிக்காதது ஆகியவை இதில் அடங்கும்.

கூடுதலாக, முகக் கவசம் அணியாதது, தடையை மீறுதல் மற்றும் அத்தியாவசிய நோக்கம் இல்லாமல் அவர்கள் வசிக்கும் இடத்தை விட்டு வெளியேறுதல் போன்ற காரணங்களுக்காக 53 பேருக்கு தலா S$300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலையிட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த 10 வணிகங்களுக்கு ESG அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் இனி சுலபமாக தங்களுடைய பணத்தை சொந்த ஊருக்கு அனுப்பலாம்..!