COVID-19 கிருமித்தொற்று: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!

MOH also reported that a 68-year-old Singaporean man died from complications due to COVID-19
MOH reported that a 68-year-old Singaporean man died from complications due to COVID-19

சிங்கப்பூரில் COVID-19 தொற்றால் மேலும் ஒரு உயிரிழப்பை சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.

மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போதுவரை 21ஆக உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் Chancery Court தனியார் வீடமைப்புப் பகுதி வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கான மாற்று இடமாக அறிவிப்பு..!

இதில் 68 வயதான சிங்கப்பூர் ஆடவர் திங்களன்று COVID-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் உயிரிழந்தார் என்றும் MOH தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் சம்பவம் 1305 என அடையாளம் காணப்பட்ட அந்த நபருக்கு கடந்த மாதம் ஏப்ரல் 5 ஆம் தேதி COVID-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடீமியா ஆகியவை இருந்ததாக MOH குறிப்பிட்டுள்ளது.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளது மற்றும் அவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது என்று MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் மேலும் 425 பேர் COVID-19 தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்..!