கோவிட்-19 தொற்றினால் வீழ்ச்சி கண்ட நிறுவனங்கள் எழுச்சிப் பெற MOM பங்களிப்பு!

Photo: Business Mag

சிங்கப்பூரில் செயல்படும் நிறுவனங்கள் கோவிட்-19 தொற்றுப் பரவலினால் சமுதாய நெருக்கடிக்குட்பட்டு பல்வேறு நஷ்டங்கள் மற்றும் வீழ்ச்சிகளை அடைந்துள்ளது.

சிங்கப்பூரின் நிறுவனங்கள் வீழ்ச்சிகளிலிருந்து எழுச்சிப் பெற மனிதவள அமைச்சின் வளங்கள் பெரும் பயனுள்ளதாகவும், பங்களிப்பாகவும் இருக்குமென்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட ஊழியர்களை தனிமைப்படுத்துவதில் தடுமாற்றம்!

அதாவது, நிறுவனங்கள் வர்த்தக நெருக்கடியிலிருந்து மீண்டு வர மனிதவளத்துறையில் ஆற்றல்கள் நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்குமென்று அவர் குறிப்பிட்டார்.

நிறுவனங்களின் பணியாளர்களுக்கு பக்கபலமாகவும், வேலைகளை பாதுகாக்கும் விதமாகவும் மனிதவள அமைச்சு பொருட்செலவு குறைப்பு போன்ற செயல்பாடுகளை செய்துள்ளது.

நிறுவனங்களில் ஏற்படும் பணியிட மாற்றங்கள், பணியாளர்களின் பணிசார்ந்த ஆர்வம், அவர்களின் மனநலம் பக்குவம் அறிவது மற்றும் மனிதவள நிர்வாகத்தின் குறுகீடு செயல்கள் போன்றவற்றிற்காக மனிதவள அமைச்சிடம் உதவி கேட்கலாம் என்றும் திரு. டான் குறிப்பிட்டார்.

மனிதவள நிபுணத்துவ பயிற்சி நிலையத்தில், மனிதவள துறையைச் சார்ந்த நிபுணர்கள் பயிற்சி எடுத்து சான்றிதழ் பெற்றுக்கொள்வது சிறந்தது என்று அமைச்சு தெரிவித்தது.

மேலும் சிங்கப்பூரின் மனிதவள அமைச்சு அங்கீகரிக்கும் இப்பயிற்சிகளை, சுமார் 4500க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பயிற்சி செய்து IHRP என்ற சான்றிதழ்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்த பல்வேறு நிறுவனங்கள் தற்போது கடுமையாக முயற்சி செய்து முன்னேறி வருவதாகவும், மின்னிலக்கம் போன்றவற்றில் வேகமாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

இவ்வாறு வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர முயலும் நிறுவனங்களுக்கு மனிதவளத்துறையின் வளங்களும், ஆற்றல்கள் மற்றும் திறன்களும் பெரும் பங்களிப்பாகவும், முன்னேற்றித்திற்கான படிக்கட்டாகவும் இருக்குமென்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வர சிரமத்தை சந்திக்கும் பயணிகள்!