சிங்கப்பூரில் 300க்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்க அனுமதி..!

more than 300 construction projects have received approval to resume work - BCA
more than 300 construction projects have received approval to resume work - BCA (Photo: Today)

சிங்கப்பூரில் 300க்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்க ஒப்புதல் வழங்கியுள்ளதாக கட்டட, கட்டுமான ஆணையம் (BCA) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் 250 திட்டங்களின் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை பாதுகாப்பாக மீண்டும் தொடங்க பரிசீலனை நடந்து வருவதாக BCA குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்தவர்கள் சென்று வந்த பட்டியலில் புதிதாக 6 பொது இடங்கள் சேர்ப்பு..!

கட்டுமானத் ஊழியர்களின் மத்தியில் மற்றொரு COVID-19 பரவலைத் தடுக்க இது அவசியம் என்று BCA தெரிவித்துள்ளது.

கட்டுமான நிறுவனங்கள், https://go.gov.sg/bca-project-readiness என்ற முகவரியின் மூலம் மீண்டும் பணியைத் தொடங்கத் தயாரா என்பதைச் சரிபார்க்கலாம் என்று BCA குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, புதுப்பிப்பு நிறுவனங்கள் தனியார் வீடுகளிலோ, கழக வீடுகளிலோ வசிக்கும் ஊழியர்களைக் கொண்டு வேலையைத் தொடங்கலாம்.

தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்கள், அந்த விடுதிகளுக்கு உரிய அனுமதி கிடைத்த பிறகே, மீண்டும் வேலைக்குச் செல்ல இயலும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தம்மை நெகிழவைத்த 3 வெளிநாட்டு ஊழியர்கள் பற்றிப் பகிர்ந்துகொண்ட அமைச்சர் ஸாக்கி முகமது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetsg/

?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr

?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg

??Telegram  – https://t.me/tamilmicsetsg

?? Sharechat – https://sharechat.com/tamilmicsetsg