சிங்கப்பூரில் COVID-19 பரவலுக்கு மத்தியில் முஸ்லிம்களின் ரமலான் மாதம் தொடக்கம் – பிரதமர் லீ வாழ்த்து..!

Muslims mark the start of Ramadan amid COVID-19 outbreak
Muslims mark the start of Ramadan amid COVID-19 outbreak (Photo: MUIS)

சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் புனித ரமலான் மாதத்தை இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 23) வித்தியாசமான ஒரு சூழலில் வரவேற்றனர்.

நாளை வெள்ளிக்கிழமை ரமலான் நோன்பின் முதல் நாளாக இருக்கும், ஆனால் COVID-19 பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் “சர்க்யூட் பிரேக்கர்” அமலில் இருப்பதால் இங்குள்ள முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் இருக்கவேண்டிய கட்டாய சூழலில் உள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19 நோயாளிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைக்க Tanjong Pagar முனையத்தில் பெரிய இடவசதி..!

இந்நிலையில், பிரதமர் லீ சியென் லூங் அனைத்து முஸ்லிம்களுக்கும் ரமதான் மாத வாழ்த்துகளை தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த ரமலான் உங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து அமைதியின் பிரதிபலிப்பு மற்றும் பிரார்த்தனைக்கான நேரமாக இருக்கட்டும் என்று திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கோவிட் -19 பரவல் காரணமாக கடுமையான பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த ஆண்டு ரமலான் மாதம் குறிப்பிடத்தக்க வகையில் வித்தியாசமாக இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனையில் இந்தியர் உயிரிழப்பு..!