வேலை நேரத்திலும் பொதுமக்களுக்கு உதவிய வெளிநாட்டு ஊழியர்கள் – குவியும் பாராட்டு

Netizen praises workers for handing out umbrellas
(Photo: Stomp)

சிங்கப்பூரில் மழை பெய்யும்போது குடைகளை கொண்டு பொதுமக்களுக்கு உதவிய ஊழியர்களின் செயல் வலைத்தளவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.

பேஸ்புக்கில் கடந்த மார்ச் 30 ​​அன்று அந்த புகைப்படம் Complaint Singapore பேஸ்புக் குழு பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல், மே மாதங்களில் மூடப்படும் சில வடகிழக்கு வழித்தட நிலையங்கள்..!

அந்த புகைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய கட்டிடம் மற்றும் லாவெண்டர் MRT நிலையம் அருகே ரோச்சர் ரிவெர் குறுக்கே செல்லும் பாலம் இடையே மேற்கூரையற்ற பகுதி உள்ளது.

அங்கு மழை பெய்து கொண்டிருந்தபோது, இரண்டு கட்டுமானத் ஊழியர்கள் வழிப்போக்கர்களுக்கு குடைகளை கொடுத்து உதவி வந்தனர்.

ஒருபக்கத்தில் வழிப்போக்கர்களுக்கு குடை கொடுக்கப்பட்டு அது மறுபக்கத்தில் திரும்ப பெறப்பட்டது.

இது மிக புத்திசாலிதனமான நடைமுறை என்றும்,  விலையுயர்ந்த தொழில்நுட்பம் இதற்காக தேவையில்லை என்றும் அந்த ஊழியர்களை பலர் பாராட்டி வருகின்றனர்.

சிங்கப்பூர் பயணிகள் விமானத்திற்கு தடை விதித்த நகரம்