சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள்..!

(Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, புதிதாக 51 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் 43 பேர் அடங்குவர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அமைச்சகத்தால் COVID-19 தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட, துவாஸ் வியூ வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிதாக கிருமித்தொற்று பாதிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்படும் எல்லைகள் – தகுந்த ஏற்பாடுகள் உள்ளன: நிபுணர்கள்..!

அந்த தங்கும் விடுதியில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களில் ஒன்று, முந்தைய ஐந்து சம்பவங்களுடன் தொடர்புடையவை என்றும் MOH தெரிவித்துள்ளது.

துவாஸ் வியூ தங்கும் விடுதி கடந்த ஏப்ரல் 17 அன்று தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த அறிவிப்பு ஆகஸ்ட் 4 அன்று ரத்து செய்யப்பட்டது.

COVID-19 தொற்று இல்லை என்று அறிவிக்கப்படுவதற்கு முன்னர், 1,500க்கும் மேற்பட்ட சம்பவங்கள் துவாஸ் வியூ தங்கும் விடுதியுடன் தொடர்புடையவை என்றும் MOH தெரிவித்துள்ளது.

தங்கும் விடுதிகளில் உள்ள 43 சம்பவங்களில், 26 சம்பவங்கள் முந்தைய பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புகளாக முன்னர் அடையாளம் காணப்பட்டன, மேலும் அவை பரவுவதைத் தடுக்க அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கிருமித்தொற்று பாதித்த ஊழியர்கள் பணிபுரிந்த 20 கட்டுமானத் திட்டங்களுக்கு பாதுகாப்பு நேரம் – BCA..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg