‘புத்தாண்டு கொண்டாட்டம் 2024’: சிங்கப்பூரில் 7 ஹார்ட்லேண்ட் இடங்களில் கண்கவர் வாணவேடிக்கைகள் நடைபெறும் என அறிவிப்பு!

'புத்தாண்டு கொண்டாட்டம் 2024': சிங்கப்பூரில் 7 ஹார்ட்லேண்ட் இடங்களில் கண்கவர் வாணவேடிக்கைகள் நடைபெறும் என அறிவிப்பு!
Tampines Town Council on Facebook

 

ஆங்கிலப் புத்தாண்டு- 2024 கொண்டாடட்டத்திற்கு இன்னும் சரியாக ஒருவாரமே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உலகிலேயே ஆக சுறுசுறுப்பான அனைத்துலக விமான நிலையங்களில் சாங்கி விமான நிலையத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

அந்த வகையில், சிங்கப்பூரின் ‘People’s Association’ புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக, ‘People’s Association’ சிங்கப்பூரின் ஏழு ஹார்ட்லேண்ட் (Heartland) இடங்களில் இரவைப் பகலாக்கும் வாணவேடிக்கைகளை நிகழ்ந்த உள்ளதாகவும், அந்த இடங்களின் பெயர்களையும் அறிவித்துள்ளது.

தெம்பனீஸ் ஹப் (டவுன் ஸ்கொயர்), பூன் லே (புளோக் 215 பூன் லே பிளேஸ் ஹார்ட்கோர்ட்), கியட் ஹாங் (கியட் ஹாங் ஸ்கொயர், ஹார்ட்கோர்ட் அட் சோ சு காங்க் லூப்), மாக்பர்ஸன் (MacPherson) (ஹார்ட்கோர்ட் அவுட்சைட் மாக்பர்ஸன் கம்யூனிட்டி கிளப்), மரைன் பாரேட் (Marine Parade) (புளோக் 46 மரைன் கிரெசென்ட் ஹார்ட்கோட்), மார்சிலிங் (Marsiling) (வுட்லேண்ட்ஸ்) ஆகிய இடங்களில் கண்கவர் வாணவேடிக்கைகள் நடைபெறவுள்ளது.

துவாஸ் அருகே ஏற்பட்ட விபத்தில் இரு வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்

அதேபோல், புத்தாண்டை முன்னிட்டு, வரும் டிசம்பர் 30, டிசம்பர் 31 ஆகிய இரண்டு நாட்களில் 28 சமூக கொண்டாட்டங்கள் (28 Community Celebrations) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொண்டாட்டங்களில் சைலண்ட் டிஸ்கோ (Silent Disco), விளையாட்டு திருவிழா (Sports Carnival), பேஷன் ஷோ (Fashion Show), கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் 70,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ‘People’s Association’ தெரிவித்துள்ளது.