தடுப்பூசிகளால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதை மறைக்கமாட்டோம் – சுகாதார அமைச்சகம்.!

Photo: Getty

சிங்கப்பூரில் COVID-19க்கு எதிரான தடுப்பூசிகளால் தீய பக்க விளைவுகள் ஏதேனும் நேர்ந்தால், அதை மறைக்கும் எண்ணம் தங்களுக்கோ அல்லது அறிவியல் ஆணையத்துக்கோ இல்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19 தடுப்பூசிகள் அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஆணையம் ஒப்புதல் வழங்கியதை அமைச்சகம் சுட்டிக்காட்டியது.

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய நபர்களுக்கு உதவி – ஆய்வாளர் பணியிடை நீக்கம்

COVID-19 தடுப்பூசியோடு தொடர்புடைய தீய பக்கவிளைவோ, மரணமோ நேர்ந்ததாகக் கூறப்படும் ஒவ்வொரு முறையும், பொறுப்புமிக்க சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு என்னும் வகையில், ஆணையம் உடனடியாக அதை முழுமையாக மதிப்பிடும் என்று அமைச்சகம் குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் இதுவரையிலும் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதால் யாரும் மரணமடைந்ததாக தகவல் இல்லை என்றும், தடுப்பூசியோடு தொடர்பில்லாத ஒன்றுக்கு மேற்பட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாகச் சிலர் இறந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் இறந்து போன சிலரைத் தமக்குத் தெரியும் என ஐரிஸ் கோ (Iris Koh) என்னும் பெண் முகநூலில் பதிவிட்டதற்கு, பதிலளிக்கும் விதமாக சுகாதார அமைச்சகம் அண்மை விவரங்களைத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனத்தில் S$653,000 மோசடி – 3 பேர் கைது.!