“புதிய தொற்று அலைக்கான எந்த ஆதாரமும் இல்லை” – சுகாதார அமைச்சர் ஓங்

stallholders-heartland-coffeeshop quits-due-high-rents
Pic: Unsplash

சமூக அளவில் COVID-19 பாதிப்புகள் அதிகரித்த இந்த சூழலில் “புதிய தொற்று அலைக்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் நேற்று (மே 12) தெரிவித்தார்.

சமீபத்தில் அதிகரித்த தொற்று பாதிப்புகள் குறித்து பேஸ்புக் பதிவில் பேசிய திரு ஓங், “சமூக அளவில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன, ஆனால் ஒவ்வொரு சில நாட்கள் அடிப்படையில் அது இரட்டிப்பாகவில்லை” என்று கூறினார்.

பயங்கர தீ விபத்து.. ஒருவர் உயிரிழப்பு – குழந்தை உட்பட 3 பேர் மருத்துவனையில்…

கடந்த ஏப்ரல் 26 முதல் சிங்கப்பூரில் சமூக அளவிலான நடவடிக்கைகளுக்கு முழுமையாக அனுமதி அளிக்கப்பட்டது, இதனை அடுத்து இந்த தொற்று அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டது தான் என்று அவர் கூறினார்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் லேசான அறிகுறிகளுடன் வீட்டிலேயே குணமடைகின்றனர் என்று திரு ஓங் கூறினார்.

அதே போல, மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் கடுமையான அறிகுறிகளுடன் அதிகமானோர் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், அதிகமான தடுப்பூசிகள் மற்றும் கடந்தகால நோய்த்தொற்றுகளிலிருந்து மீண்டு வந்ததன் காரணமாக, தற்போதைய பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லாமல், பாதிப்புகளின் அதிகரிப்பை கையாள முடியும் என்று அவர் கூறினார்.

இந்திய ஊழியர் கண்டெய்னர்களுக்கு இடையே சிக்கி மரணம்: கனரக வாகன ஓட்டுநருக்கு சிறை