“பாதுகாப்பு இடைவெளி இனி தேவையில்லை”… குழு, வேலையிட வரம்பு இல்லை – அசத்தல் அறிவிப்புகள் ஓர் பார்வை!

No limit on group size masks not mandatory
(Photo: TODAY)

சிங்கப்பூரில் ஒன்றுகூடும் குழு வரம்புகளின் எண்ணிக்கை அல்லது வேலையிட வரம்புகள் இனி அடுத்த செவ்வாய் (ஏப்ரல் 26) முதல் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை பெரிய அளவில் சிங்கப்பூர் தளர்த்துவதாக இன்று (ஏப்ரல் 22) அறிவித்துள்ளது.

JUSTIN: வெளிநாட்டு பயணிகளுக்கு மஜா அறிவிப்பு: சிங்கப்பூருக்குள் நுழைய எந்தவித கோவிட்-19 சோதனைகளும் இனி தேவையில்லை!

அதாவது அடுத்த செவ்வாய் முதல், முகக்கவசம் அணியாத இடங்களில் தனிநபர்கள் இனி 10 பேர் கொண்ட குழுவில் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

பெரும்பாலான இடங்களில் SafeEntry மற்றும் TraceTogether செயலியின் பயன்பாடுகள் நிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா சூழல் பெரும்பாலும் கட்டுக்குள் இருப்பதால், இதற்கு முன்பு இருந்த வீட்டிற்கு தனிப்பட்ட வருகையாளர்களின் எண்ணிக்கை 10 பேர் என்ற வரம்பு நீக்கப்படும்.

அதே போல, தனிநபர்களுக்கிடையில் அல்லது குழுக்களுக்கிடையில் பாதுகாப்பு இடைவெளி இனி தேவைப்படாது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய எந்தவித கோவிட்-19 சோதனைகளும் இனி தேவையில்லை என்றும் கூறியுள்ளது அமைச்சகம்.

தவறான உறவு கொண்டதாக வெளிநாட்டவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, 3 பிரம்படி!