வெளிநாட்டு பயணிகளுக்கு மஜா அறிவிப்பு: சிங்கப்பூருக்குள் நுழைய எந்தவித கோவிட்-19 சோதனைகளும் இனி தேவையில்லை!

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு
Unsplash / Matt Seymour

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், வரும் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 26) முதல் சிங்கப்பூருக்குள் நுழைய கோவிட்-19 சோதனைகள் எதுவும் மேற்கொள்ள தேவையில்லை.

இதனால் விமான பயணிகள் தங்களுக்கான சோதனைக் கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும், மேலும் சிங்கப்பூர் வரும் முன்னர் எடுக்கப்படும் pre-departure சோதனைக்கு பயணிகள் எந்தவித முன்பதிவு செய்ய வேண்டிய சிரமும் இனி இருக்காது.

தவறான உறவு கொண்டதாக வெளிநாட்டவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, 3 பிரம்படி!

முதலில், காஸ்வே மற்றும் இரண்டாவது இணைப்பு வழியாக சிங்கப்பூருக்குள் நிலவழி நுழைபவர்களுக்கான சோதனை தேவை நீக்கப்பட்டது. தற்போது விமான பயணிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த சமீபத்திய நடவடிக்கையின் அர்த்தம் என்னவென்றால், முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கான நுழைவுத் தேவைகள் தொற்றுநோய்க்கு முன்பு இருந்த நிலைக்கு கிட்டத்தட்ட மாறும்.

இந்த எளிமைப்படுத்தப்படும் விதிகளை சுகாதார அமைச்சகம் (MOH) இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.

ART சோதனை மட்டும் நிபுணர்களால் நிர்வகிக்கப்படலாம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வியாபாரிகளை மேற்பார்வையிடப்படலாம்.

டெலிகிராமில் இந்த வேலையா…பிடிபட்டால் மரண தண்டனை கூட கிடைக்கும் – தற்போது பிடிபட்ட 32 பேர்