NTU தங்கும் விடுதியில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு கட்டாய பரிசோதனை.!

NTU residents Mandatory test
Pic: Today

சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (NTU) விடுதியின் கழிவுநீர் மாதிரிகளில் COVID-19 கிருமித்தொற்று மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விடுதியில் வசிக்கும் சுமார் 38 குடியிருப்பாளர்களுக்கு கட்டாய COVID-19 பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Block 61 at Hall 13-ல் உள்ள குடியிருப்பாளர்களுக்கு நேற்று ‌(ஆகஸ்ட் 23) கட்டாய பரிசோதனை நடத்தப்பட்டதாக NTU அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி ஒன்றில் 59 பேருக்கு தொற்று பாதிப்பு

மேலும், அந்த பிளாக்கில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் அறையிலோ அல்லது வீட்டிலோ உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரின் பாதுகாப்பிற்கும், சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என NTU குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பிளாக்கிற்கு மாணவர்களும், ஊழியர்களும் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது முக்கியம்”- சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங்!