சிங்கப்பூரில் “உயிர்காக்கும் இணையதளம்” – வெளிநாட்டு ஊழியர்கள் சிகிச்சைக்கு உதவிய சிங்கப்பூர் மாணவி..!

NUS graduate builds translation portal for medical teams treating migrant workers
NUS graduate builds translation portal for medical teams treating migrant workers (Photo: EPA)

சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) நள்ளிரவு சுதேசனா ராய் சவுத்ரி COVID-19 பற்றிய செய்தியை கேட்டபோது ஒருவித அச்சம் ஏற்பட்டது.

சிங்கப்பூரில் உறுதிப்படுத்தப்பட்ட புதிய COVID-19 சம்பவங்கள், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலிருந்து பெரும்பாலான நபர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மலேசிய நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு; COVID-19 காரணமில்லை – MOH..!

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற 24 வயது மாணவி சுதேசனா ராய் சவுத்ரி சிங்கப்பூரருக்கு அன்றிரவு தூங்க முடியவில்லை, இன்னும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவ பராமரிப்பு தேவைப்படுவதை அவர் உணர்ந்தார்.

அதனை தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு மொழிபெயர்ப்பு வசதியைச் அவர் செய்துகொடுத்துள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு மொழிபெயர்த்துக் கூறத் தொண்டூழியர்கள் தேவை என்று மருத்துவர்கள் உதவி கேட்டிருந்தனர்.

பின்னர் வங்காள மொழி பேசத் தெரிந்த சுதேசனா மருத்துவர்கள் ஏதேனும் உதவி கேட்டால் தொலைபேசி மூலம் வெளிநாட்டு ஊழியர்களிடம் பேசி மொழிபெயர்த்து வந்தார்.

இதை தொறந்து சுதேசனாவிற்கு ஒரு சிந்தனை தோன்றியது. மொழிபெயர்ப்புக்காக அவர் ஒரு இணையத்தளத்தை உருவாக்க முடிவெடுத்தார்.

அந்த இணையத்தளத்தில் சிகிச்சை பற்றிய அதிகமாகப் பயன்படுத்தப்படும் கேள்விகளையும், அவற்றுக்கான பதில்களையும் ஒலிவடிவில் பதிவேற்றம் செய்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 596 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

அதாவது இந்த இணையதளத்தை நண்பர்களின் உதவியோடு, சுமார் 10 மணி நேரத்தில் அவர் வெற்றிகரமாக உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.

பின்னர் அதனை சுமார் 1,750 மருத்துவர்களிடம் பகிர்ந்தார். மொழிபெயர்ப்பு இணையத்தளம் மிகவும் உதவியாக இருப்பதாகப் பல மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, சிங்களம், மலையாளம், மலாய், மாண்டரின் என 7 மொழிகளில் தகவல்களை ஒலிவடிவில் அவர் பத்தி செய்துள்ளார்.

தற்போதைய சூழலில் மாணவியின் மொழிபெயர்ப்புத் தளம் பல உயிர்களைக் காப்பாற்ற பேருதவியாக இருக்கிறது என்று சுதேசனாவை மருத்துவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

இதுபற்றி சுதேசனா கூறுகையில், மருத்துவத்துக்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற கருத்து அவருக்கு தூண்டுதலாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார் என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறியதற்காக 200 பேருக்கு அபராதம்; மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்ட இருவருக்கு $1,000 அபராதம்..!