சிங்கப்பூரில் கட்டாய விதிமுறை மீறல்; வெளிநாட்டு மாணவி நீக்கம்..!

நியூசிலாந்தில் நடந்த சாலை விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த 3 பேர் மரணம்
NUS terminates foreign student from exchange programme for breaching leave of absence (Photo : CNA)

சிங்கப்பூரில் கட்டாய விடுப்பை மீறிய காரணத்திற்காக, தேசிய பல்கலைக்கழகம் (NUS) வெளிநாட்டு மாணவி ஒருவரை நீக்கம் செய்து சொந்த நாட்டிற்கு அனுப்பியுள்ளது.

அந்த மாணவி தவறான பயண விவரங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என்று பல்கலைக்கழக மாணவர்களின் டீன் அசோசியேட் பேராசிரியர் லியோங் சிங் (மார்ச் 8) NUS இணையதளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; மேலும் 12 புதிய COVID-19 சம்பவங்களை உறுதிப்படுத்திய சிங்கப்பூர்!

பரிமாற்ற திட்டத்தின் கீழ் மாணவி நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தனது நாட்டு பல்கலைக்கழகத்துக்கு திரும்புவார் என்று பேராசிரியர் லியோங் கூறியுள்ளார்.

மேலும், அந்த மாணவி அதிகாரப்பூர்வமாக கண்டிக்கப்பட்டதாகவும், அறிக்கை ஒன்று பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த மாணவி, எந்த நாட்டை சேர்ந்தவர் அல்லது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் என்றோ, அல்லது அவர் இந்த விடுப்பை மீற என்ன செய்தார் என்றோ குறிப்பிடவில்லை.

இதுகுறித்த CNAவின் கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்க பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது. மேலும் இது உள்விவகாரம் மற்றும் ரகசியமானவை என்று அது கூறியுள்ளது.

சிங்கப்பூர் வந்தடைந்த மறுநாளிலிருந்து இந்த கட்டாய 14 நாட்கள் விடுப்பு தொடங்கி நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : CNA

இதையும் படிங்க : சிங்கப்பூரில் போலியான பொருட்கள் விற்பனை; 3 பேர் கைது – $239,000 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..!