சிங்கப்பூருக்கு வரும் சரக்கு ஓட்டுநர்கள், உடன் வரும் ஊழியர்களுக்கு இனி On-arrival கோவிட்-19 சோதனை இல்லை!

on-arrival-test malaysia-truck-drivers

மலேசியாவில் இருந்து துவாஸ் மற்றும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்கு வரும் சரக்கு ஓட்டுநர்கள் மற்றும் உடன் வரும் ஆட்களுக்கு இனி On-arrival கோவிட்-19 சோதனை இருக்காது.

இது மார்ச் 24 முதல் துவாஸ் மற்றும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் Work pass அனுமதிக்கு தேவைகளுக்கு இது கட்டாயம் – தங்கும் விடுதி, கட்டுமான ஊழியர்களுக்கு Mandatory!

அதற்கு பதிலாக, அவர்கள் செல்லுபடியாகும் புறப்படுவதற்கு முன் (Pre-departure test) எடுக்கப்பட்ட “நெகடிவ்” சோதனை முடிவை அங்கு கட்டாயம் காட்ட வேண்டும்.

இல்லை எனில், கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த சமீபத்திய ஆதாரத்தைக் அங்கு காட்ட வேண்டும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Zoo பார்வையாளர்கள் மீது பாறையை வீசிய “குட்டி சிம்பன்சி”, பிரம்பை எடுத்து வெளுத்து வாங்கிய “தந்தை சிம்பன்சி” – வைரல்

குறிப்பாக, சிங்கப்பூர் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குள் pre-departure சோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இந்த அறிவிப்பை வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் (MTI) வெளியிட்டது.

மேலும் மாற்றியமைக்கப்பட்ட சோதனை நெறிமுறைகள் குறித்து மலேசிய சரக்கு ஓட்டுநர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தாராளமாக வர முடியுமா? – Work permit, S Pass ஊழியர்களுக்கு முன் அனுமதி வேண்டுமா?