PAP மத்திய செயற்குழு உறுப்பினர்களாக 2 அமைச்சர்கள் முதல் முறையாக தேர்வு..!

PAP Lawrence Wong Desmond Lee
(Photos: Mr Wong and Mr Lee's Facebook pages)

சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியின் (PAP) மத்திய செயற்குழு உறுப்பினர்களாக இரண்டு அமைச்சர்கள் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) 36வது மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அவர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

குறிப்பிட்ட 2 நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோர் தனிமைப்படுத்தும் வசதிகளில் தங்குவது கட்டாயம்.

COVID-19 அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவின் இணைத் தலைவரான கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் மற்றும் கட்சியின் பொதுத் தேர்தல் மறுஆய்வை மேற்பார்வையிடும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டில், திரு வோங் மற்றும் திரு லீ ஆகியோர் 35வது செயற்குழு கூட்டத்தில் இணை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

செயற்குழுவில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்கள்:
  • பிரதமர் லீ சியென் லூங்
  • துணை பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் ஸ்வீ கீட்
  • வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் சான் சுன் சிங்
  • சுகாதார அமைச்சர் கான் கிங் யோங்
  • நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ
  • சட்ட, உள்துறை அமைச்சர் கே.சண்முகம்
  • சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி
  • போக்குவரத்து அமைச்சர் ஓங் யே குங்
  • வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்
  • நாடாளுமன்ற சபாநாயகர் டான் சுவான்-ஜின்

மேலும் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா மற்றும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ இருவரும் செயற்குழுவில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ1.30 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

சிங்கப்பூரர்கள் அரசியலில் விரும்புவதை PAP ஏற்று செயல்படுத்த வேண்டும் – பிரதமர் லீ.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…