சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் – LTA..!

taxi-fare foreigners singapore

சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட (Phase 2) நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து, பொதுப் போக்குவரத்தில் பயணிகள் எண்ணிக்கை வரும் நாள்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

அதாவது இந்த இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், பொதுப் போக்குவரத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுவதாக LTA குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் மசூதிகளில் ஆன்லைன் முன்பதிவுடன் மீண்டும் தொடங்கும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை..!

அதாவது இரண்டு மாதங்களுக்குப் பிறகு, டாக்சி நிறுத்துமிடங்களில் தொடர்ந்து பயணிகள் காத்திருப்பதைக் காணமுடிகிறது.

COVID-19 தொற்று பரவலுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டதை அடுத்து, மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக டாக்சிக்களுக்கான தேவை உயர்ந்திருப்பதாக சில டாக்சி நிறுவனங்கள் கூறியுள்ளதாக செய்தி மீடியாகார்ப் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : “தனிப்பட்ட சிரமங்களை வெளிக்காட்டாமல் குடும்பத்தின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுபவர் தந்தை” – பிரதமர் லீ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg