“தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம்”- சிங்கப்பூர் காவல்துறை அறிவுறுத்தல்!

File Photo Via The Singapore Police Force

சிங்கப்பூரில் போலி தொலைபேசி அழைப்புகள், போலி மின்னஞ்சல்கள், போலி இணையதளங்கள் மூலம் பண மோசடி நடைபெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பண மோசடியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிங்கப்பூரர்கள் உள்ளிட்டோர் பல்லாயிரக்கணக்கான சிங்கப்பூர் டாலர்களை இழந்துள்ளனர். இந்த பண மோசடிகள் தொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்மந்தமாக, சந்தேகத்தின் பேரில் பலரை கைது செய்துள்ள காவல்துறையினர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அத்துடன், கைதானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பண மோசடியில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்க காவல்துறையினர் முனைப்பு காட்டி வருகின்றன.

சிங்கப்பூரில் புதிதாக 709 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

அதே சமயம், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்கள் தொலைபேசிக்கு வரும் வங்கி OTP எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்புகளை எடுக்க வேண்டாம். மோசடி அழைப்பு இது என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், சிங்கப்பூர் காவல்துறை பொதுமக்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி போல் நடித்து மோசடி நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தயவு செய்து கவனமாக இருங்கள் சகோதரர்களே! சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி போல் நடித்து மோசடி கும்பல், பண மோசடி செய்ய முயற்சிக்கின்றனர். எனவே, தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம். இது போன்ற மோசடி அழைப்புகளை உடனடியாக தடுக்க வேண்டும். தேவைப்பட்டால் தங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள McDonald’s கடைகளில் ‘Breakfast Family Meal’-யை வாங்குபவர்களுக்கு ‘Picnic Set’ இலவசம்!

சிங்கப்பூரில் வேலைத் தேடும் இளைஞர்களைக் குறித்து வைத்து பண மோசடி சம்பவங்களும் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.