சிங்கப்பூரின் 2ஆம் கட்டத் தளர்வு : சில விளையாட்டுகள் மீண்டும் தொடங்க அனுமதி..!

Phase 2 reopening: Contact sports allowed from June 19, but no more than 5 participants for any group activity
Phase 2 reopening: Contact sports allowed from June 19, but no more than 5 participants for any group activity (Photo: TODAY file photo)

சிங்கப்பூரின் 2ஆம் கட்ட தளர்வில் சில விளையாட்டு, உடல் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மீண்டும் தொடங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் குழு ஒன்றில் ஐந்து பங்கேற்பாளர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டம் (Phase 2) – சில்லறை வர்த்தகங்களுக்கான குறிப்பிட்ட நிபந்தனைகள்..!

ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் விளையாட்டு இடத்தைப் பகிர்ந்துகொண்டால், குழுக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக்கூடாது, மேலும் 3 மீ தூரத்தை கடைபிடிக்க வேண்டும்.

COVID-19 நோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளில் இவை அடங்கும்.

கால்பந்து, ஹேண்ட்பால், நெட்பால், கூடைப்பந்து, futsal, அல்டிமேட் ஃப்ளையிங் டிஸ்க், டச் ரக்பி மற்றும் பெயிண்ட்பால் போன்ற விளையாட்டுகள் குழு அளவு வரம்பைக் கடைப்பிடிக்கும் வரை எந்த மாற்றமும் இல்லாமல் தொடரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள் விளையாட்டு வசதிகளை அதிகபட்சமாக 50 பேர் வரை பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களும் நள்ளிரவு வரை இயங்கும்.

விளையாட்டு இடவசதிகள் குளிரூட்டப்படாததாக இருந்தால், ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும் மற்றும் கூடுதல் விசிறிகள் வைக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டம் (Phase 2) – வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு மனிதவள அமைச்சகம் அறிவுரை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/

?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr

?? Twitter      https://twitter.com/tamilmicsetsg

??Telegram  https://t.me/tamilmicsetsg

?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg