சிங்கப்பூரின் 2ஆம் கட்டம் (Phase 2) – சில்லறை வர்த்தகங்களுக்கான குறிப்பிட்ட நிபந்தனைகள்..!

Phase Two reopening: Authorities issue advisory for retail outlets, lifestyle services to prepare for resumption of business
People walking on a pathway between rows of shops at Yishun Ave 11 on Jun 10, 2020. Photo: Ooi Boon Keong/TODAY

சிங்கப்பூரில் இரண்டாம் கட்டத்தில் சில்லறை வர்த்தகங்கள் மீண்டும் தொடங்கப்பட உள்ள நிலையில், குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அரசாங்க அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மொத்தம் 930 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட அனைத்து மால்கள் மற்றும் பெரிய தனித்தனி கடைகளில், மொத்த சதுர பரப்பளவில் 10 சதுர மீட்டருக்கு ஒரு நபர் மட்டுமே இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டம் (Phase 2) – வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு மனிதவள அமைச்சகம் அறிவுரை..!

  • அதே போல் மற்ற இடங்களில் அனுமதிக்கப்பட்ட குழுக்கள் அல்லது நபர்களிடையே ஒரு மீட்டர் இடைவெளியைப் பின்பற்றவேண்டும்.
  • கடைகள், பேரங்காடிகள், மால்களில் SafeEntry முறை பயன்படுத்தப்படவேண்டும்
  • வரிசைகளில் நிற்பதற்குரிய இடங்களைக் கடைகள், குறியிட்டுக் காட்டவேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றவேண்டும்.
  • மால்களில் உள்ள Atrium எனப்படும் பொது முற்றங்களில், நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய அனுமதி இல்லை. விளையாட்டுத் தளங்களில் வாடிக்கையாளர்களை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பெரிய கடைகள், அழகுப் பராமரிப்புச் சேவை வழங்கும் இடங்கள், உடல்வெப்பநிலைச் சோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.
  • உடல்நலம் இல்லாதோரை கடைகளுக்குள் அனுமதிக்கக்கூடாது.
  • கடைகளில் அழகு சாதனப் பொருள்களின் மாதிரிகள், உணவு மாதிரி, பலர் தொடக்கூடிய பொருள்கள் அகற்றப்பட வேண்டும்.
  • வாடிக்கையாளர்கள், கடைக்காரர்கள், சுகாதார ஆலோசனைக்கு இணங்க முகக் கவசங்களை அணிய வேண்டும்.
  • வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு S$10,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : உலக போட்டித்திறன் தரநிலை குறியீட்டு பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடம்..!