வெளிநாட்டு ஊழியர்களை அழைத்து வருவதற்கான திட்டம் – பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம்

(photo: mothership)

கட்டுமானம், கடல் மற்றும் செயலாக்கத் துறைகளில் பணிபுரிய, இந்தியாவில் இருந்து குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதே போல, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு அதிகமான பணிப்பெண்களை கொண்டுவருவதற்கான பைலட் திட்டத்தின்கீழ் ஜூலை15 முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிக வாடகையால் அவதிப்பட்டுவரும் லிட்டில் இந்தியா வணிகர்களுக்கு ஆதரவளிக்க கோரிக்கை!

புதிய இயல்புநிலைக்காக திட்டமிடலில் இது அவசியமான பகுதியாகும். ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதற்கு முன்பு அவர்களின் சொந்த நாடுகளில் உள்ள தனிமைப்படுத்தும் வசதிகளில் கொவிட்-19 சோதனை நெறிமுறைகள் மேற்கொள்வது ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும்.

வழக்கமான வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு மற்றும் சோதனை நெறிமுறைகள் இங்கு வந்த உடனும், வேலையைத் தொடங்குவதற்கு முன்பும் செயல்படுத்தப்படும்.

கோவிட்-19 சோதனை நெறிமுறைகளைத் தவிர, ஊழியர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இருந்து வரும்போதே தடுப்பூசி போடப்பட வேண்டுமா? இல்லையென்றால், அவர்கள் சிங்கப்பூர் வந்தபின்னர் அல்லது வேலை தொடங்குவதற்கு முன் தடுப்பூசி போடப்பட வேண்டுமா? என்பது கேள்வியாக உள்ளது.

பாலியல் சேவைகள் வழங்கிய சந்தேகத்தில் 9 பெண்கள் கைது – ஆறு பேரின் வருகை அனுமதி ரத்து

கொவிட்-19 பரவல் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து பணிப்பெண்கள் அதிகமானோர் சிங்கப்பூர் வருகிறார்கள், இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கும் அதே நடைமுறை பொருந்தும் என மனிதவள அமைச்சர் கன் சியோ ஹுவாங் கூறினார்.

இந்த பைலட் திட்டங்கள் நன்கு சிந்திக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அனுமதிக்கப்படும் ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதையும் உறுதிசெய்தால் தேவையற்ற ஆபத்துகளை தவிர்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.