தமிழ் புத்தாண்டு: சிங்கப்பூர் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வருகை!

(Photo: TripAdvisor)

கடந்த ஆண்டு கொவிட்-19 கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் தமிழ் புத்தாண்டின் போது வீடுகளில் இருந்த பலருக்கு, இந்த ஆண்டு கோயில்களுக்கு செல்ல முடிந்தது, மேலும் அவர்கள் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

சித்திரை முதல் நாளை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோவிலிலும் நேற்று ஏராளமான பக்தர்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது, அதிகமான பக்தர்கள் இருந்தாலும் அனைவரும் சமூக இல்டைவெளியை கடைபிடித்ததாகவும் தெரிவித்துள்ளது.

ஆயுதமேந்தி கடையில் கொள்ளை – 5 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த போலீஸ்!

கடந்த மாதம் வெளியான செய்தியில் ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சென்ற இடமாக அறிவிக்கப்பட்டது, இதை தொடர்ந்து ஆலையம் முன்னெச்செரிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளதால் பக்தர்கள் தைரியத்துடன் வருகை தருவதாக கூறப்பட்டுள்ளது.

எதிர்காலத்தை குறித்து நம்பிக்கை வளர்பதற்க்காவே நாம் ஆலயங்களுக்கு செல்வதாகவும், இந்த ஆண்டு நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையும் இருப்பதாக சேவை உபசரிப்புத் துறையில் பணியாற்றும் ப. வீரன் (வயது 44) கூறியுள்ளார்.

ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களில் ஒருவரான காசி விஸ்வநாதன் இந்தியாவில் இருக்கும் தனது குடும்பங்களை எண்ணி வருத்தமாக இருப்பதாகவும் இந்த எண்ணங்கள் மாறுவதற்காக இந்நாளில் ஆலயத்திற்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய ஊழியருக்கு தொற்று – தங்கும் விடுதியில் ஊழியர்களுக்கு பரிசோதனை