“தடுப்பூசி மருந்துகள் முதன்முதலில் வந்தது மகிழ்ச்சி; புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்க இது உதவும்” – பிரதமர் லீ

PM Lee COVID-19 Vaccine
(Photo: TODAY)

சிங்கப்பூருக்கு முதன்முதலில் தடுப்பூசி மருந்துகள் வந்தது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றின் வரவேற்பு தற்போது நிகழ்ந்துவிட்டதாக திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

பயணிகளுக்கு நற்செய்தி: இந்தியா-சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்கள்!

தடுப்பூசி மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்திய சுகாதார அறிவியல் ஆணையம், சுகாதார அமைச்சகம், சிங்கப்பூர் பொது சேவைத் தலைவர்கள் மற்றும் இதை சாத்தியமாக்கிய பல அமைப்புகள் மற்றும் தளவாட ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்தார்.

மேலும், பல அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு சரியான நேரத்தில் தடுப்பூசி குறித்த விவரங்களை அறிவிக்கும், எனவே காத்திருங்கள் என்றும் கூறியுள்ளார்.

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் வயதானவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், தடுப்பூசி கட்டாயமில்லை என்றும், ஆனால் சிங்கப்பூரர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.

“இது ஒரு நீண்ட மற்றும் கடினமான ஆண்டு. தடுப்பூசி குறித்த செய்தி இந்த பண்டிகை காலத்தில் சிங்கப்பூரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும், மேலும் 2021 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்க உதவும் என்று நம்புகிறேன்” என்றார்.

பயங்கர ஆயுதங்களுடன் கலவரம்…மேலும் 7 பேர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…