“ஆகக் குறைவான கோவிட்-19 மரணங்கள் பதிவான உலக நாடுகளில் நாமும் ஒன்று”- சிங்கப்பூர் பிரதமர் உரை!

Photo: Prime Minister'S Office, Singapore

சிங்கப்பூரின் கோவிட்-19 நிலைமை குறித்து பிரதமர் லீ சியன் லூங் நேற்று (24/03/2022) காலை 11.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். இதில், உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா தளர்வுகள் பலவற்றையும் அறிவித்திருந்தார்.

சிங்கப்பூரில் 75 சதவிகித தமிழர்கள் மாடா உழைக்கிறாங்க! மீதி உள்ள 25 சதவீதம் பேரின் நிலை என்ன? அவங்க லெவலே வேற!

பிரதமரின் லீ சியன் லூங் கூறியதாவது, “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக, நாம் கோவிட் -19 கிருமியுடன் போராடி வந்துள்ளோம். தொடக்கத்திலிருந்தே, நமக்குத் ஒரேயொரு தலையாய குறிக்கோள் இருந்தது: உயிர்களைப் பாதுகாக்கவேண்டும்; தவிர்க்கக்கூடிய மரணங்களைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். மற்ற நாடுகளில் உள்ள மக்கள், மிகுந்த பரபரப்புடன் மருத்துவமனைகளுக்குச் செல்வதை நாம் கண்டிருப்போம்.

அவர்களில் யார் வாழ்வது, யார் மடிவது என்ற முடிவை எடுக்கும் இக்கட்டான நிலைக்கு அங்கிருந்த சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தள்ளப்பட்ட நிலையையும், நாம் பார்த்திருப்போம். இங்கு அதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க, நாம் உறுதிகொண்டிருந்தோம். நாம் அதில் வெற்றியும் கண்டுள்ளோம். நமது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு நெருக்கத்திற்கு உள்ளானது. ஆனால், அது நிலை தடுமாறவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளும், பிராணவாயுவும் தேவைப்படும் அனைவருக்கும் அவை போதுமான அளவு இருப்பதை நாம் உறுதிசெய்தோம். ஆகக் குறைவான கோவிட்-19 மரணங்கள் பதிவான உலக நாடுகளில் நாமும் ஒன்று.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்.!

இது கடினமான ஒரு போராட்டம். ஒவ்வொரு புதிய கிருமிப்பரவல் அலையிலும், நாம் துரிதமாகச் செயல்பட்டு மாறவேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும், கிருமிப்பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதாக நாம் எண்ணியபோது, கிருமி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடக்கக் கட்டங்களில், கிருமி பற்றி அதிகம் தெரியாதிருந்தபோது, நாம் கெடுபிடியான நடவடிக்கைகளைப் பின்பற்றினோம். நமது நடவடிக்கைகள், நமது சமூகத்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்களை மிகக் குறைவான எண்ணிக்கையில் வைத்திருந்தன; நமது குடிபெயர்ந்த ஊழியர் தங்கும் விடுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய கிருமிப்பரவலைக் களைய உதவின. நமது சுகாதாரப் பராமரிப்புத் துறையின் ஆற்றலை அதிகரிக்கவும், விரிவான தேசியத் தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்தவும், இக்காலம் கைகொடுத்தது.

அதன் பின்னர், இன்னும் ஆபத்தான டெல்டா கிருமி வகை நம்மைத் தாக்கியது. நல்ல வேளை! அதற்குள் நமது தடுப்பூசித் திட்டம் முழுவீச்சாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், தடுப்பூசிக்குத் தகுதிபெறும் அனைவரும், குறிப்பாக மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரையில், கிருமியின் பரவலை மெதுவடையச் செய்ய, நாம் கெடுபிடியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடப்பில் வைத்திருந்தோம். அதே வேளை, மிதமாக பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பான முறையில் குணமடைவதற்கு ஏதுவாக நமது சுகாதார நெறிமுறைகளை மாற்றினோம்.

சிங்கப்பூரில் முகக்கவசம் அணிவது எங்கு கட்டாயம்? எங்கு கட்டாயம்மில்லை? – வாங்க பார்க்கலாம்!

அதன் மூலம் நமது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு மீதான பளு குறைக்கப்பட்டது. நாம் பாதுகாப்பான நிர்வாக நடவடிக்கைகளைத் தளர்த்தியபோது, பெருமளவிலான கோவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டன. ஆனால், அதற்குள் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். டெல்டா கிருமி வகையிலிருந்து அவர்கள் நன்கு பாதுகாக்கப்பட்டனர். இருப்பினும், நோயாளிகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; சிலர் துரதிர்ஷ்டவசமாக அந்தக் கிருமிக்குப் பலியாயினர்.

கத்தார் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அமைச்சர் டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான்!

டெல்டா கிருமி வகை ஓய்ந்த சிறிது காலத்திலேயே, கோவிட் கிருமி நம்மிடையே இன்னொரு பிரளயத்தை ஏற்படுத்தியது. இம்முறை, மேலும் எளிதில் தொற்றக்கூடிய ஓமிக்ரான் கிருமி வகை நம்மைத் தாக்கியது. உலக நாடுகளில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் புதிய உச்சத்தைத் தொட, நாமும் அதனை எதிர்கொள்ள ஆயத்தமானோம். நமது கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது. உச்சகட்டமாக, ஒரே நாளில் 25,000- யைத் தாண்டியது.

தடுப்பூசிப் போட்டுக்கொள்ளும் விகிதம் அதிகமாக இருந்ததாலும், வலுவான சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பாலும், நம்மால் சமாளிக்கமுடியும் என்ற நம்பிக்கை உறுதியாக இருந்தது. எனினும், நிலைமையைச் சமாளிக்க நமது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புக்கும், ஊழியர்களுக்கும் கால அவகாசம் அளிக்கும் நோக்கில், எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினோம்; பாதுகாப்பான நிர்வாக நடவடிக்கைகளைத் தளர்த்தாமல் இருந்தோம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

ஓமிக்ரான் கிருமி வகை, முந்தைய கிருமி வகைகளைவிட வீரியம் குறைவாக இருந்ததும், பாதிக்கப்பட்டவர்களில் வெகு சிலருக்கே பிராணவாயு அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் பராமரிப்பு தேவைப்பட்டதும் கண்டு, நாம் நிம்மதி கொண்டோம். கடந்த இரண்டு வாரமாக, கிருமித்தொற்றுச் சம்பவங்களின் அன்றாட எண்ணிக்கை குறைந்து வருகின்றது. வாராந்தரக் கிருமித்தொற்று விகிதம் இப்போது 0.8. இதே விகிதம் தொடர்ந்தால், இன்னும் சுமார் மூன்று வாரத்தில், அன்றாட கிருமித்தொற்று எண்ணிக்கை பாதியாகிவிடும்.” இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.