சிங்கப்பூரில் இவரை காணவில்லை… வாசகர்கள் உதவி செய்யுங்கள்

abdul-rahman-bin-mohd-din missing
SPF/ Volunteer.gov.sg

சிங்கப்பூரில் 63 வயதான ஆடவரை காணவில்லை என்று சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) கூறியுள்ளது.

அவர் பெயர் அப்துல் ரஹ்மான் பின் முகமது தீன் என்று SPF செய்தி வெளியீட்டில் இன்று (ஆக. 27) தெரிவித்துள்ளது.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் மிதந்த சடலம் – 24 வயதுமிக்க ஆடவர் யார்?

அவர் கடைசியாக நேற்று ஆகஸ்ட் 26 அன்று மாலை 4:30 மணியளவில் 51 டெலோக் பிளாங்கா கிரசன்ட் அருகே காணப்பட்டார் என்றும் SPF குறிப்பிட்டுள்ளது.

கூடுதலாக தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

தென்னிந்திய மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உடும்பு கறி – மண்பானையில் “உடும்பு கறி சோறு” வைரல்