சிங்கப்பூரில் இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 329 பேர் கைது

(PHOTO: WALB)

சிங்கப்பூரில் இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மொத்தம் 329 மோசடிகாரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 முதல் 80 வயதுக்குட்பட்ட 207 ஆண்கள் மற்றும் 122 பெண்கள் அடங்கிய அந்த சந்தேகநபர்கள் சுமார் 534 மோசடிகளில் ஈடுபட்டவர்கள் என நம்பப்படுகிறது.

அப்பர் புக்கிட் திமாவில் மரத்தில் இறந்த நிலையில் தொங்கிய ஆடவர்

மேலும், இதில் பாதிக்கப்பட்டவர்கள் S$9.3 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்ததாக காவல்துறை சனிக்கிழமை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அவர்கள் தற்போது காவல்துறை விசாரணையில் உள்ளனர்.

இதில் முக்கியமாக இணைய காதல் மோசடிகள், ஈ-காமர்ஸ் மோசடிகள், சீனா அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் மோசடிகள், முதலீட்டு மோசடிகள், போலி சூதாட்ட மோசடிகள் மற்றும் கடன் மோசடிகள் ஆகியவை அடங்கும்.

அப்பர் தாம்சன் சாலையில் உள்ள செல்லப் பிராணிக் கடையில் தீ..!