மோசடி குறித்து 230 சந்தேக நபர்களிடம் விசாரணை!

(Photo: Ernest Chua)

மோசடி தொடர்பாக குற்றங்களில் ஈடுபட்டதாக மொத்தம் 230 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை இன்று (டிசம்பர் 31) தெரிவித்துள்ளது.

டிசம்பர் 19 முதல் டிசம்பர் 30 வரை வர்த்தக விவகாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஏழு காவல் தரைப் பிரிவுகளால் நடத்தப்பட்ட இரண்டு வார அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

சென்னை-சிங்கப்பூர் இடையே இருவழி பயணம் மேற்கொள்ள கூடுதல் விமானங்கள்!

விசாரணையில் உள்ள 230 பேரில், 16 முதல் 66 வயதுக்குட்பட்ட 151 ஆண்கள் மற்றும் 79 பெண்கள் அடங்குவர் என்றும் தெரிவித்துள்ளது.

அந்த சந்தேகநபர்கள் 388 மோசடிகளில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.

இதில் முக்கியமாக இணைய காதல் மோசடிகள், மின் வணிக மோசடிகள், சமூக ஊடக ஆள்மாறாட்டம் மோசடிகள் மற்றும் போலி சூதாட்ட தளம் மற்றும் கடன் மோசடிகள் ஆகியவை அடங்கும்.

இந்த மோசடியில் விழுந்தவர்கள், சுமார் S$2.9 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்ததாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் சமூக அளவில் 5 பேர் உட்பட புதிதாக 30 பேருக்குக் கிருமித்தொற்று

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…