சிங்கப்பூரில் சமூக அளவில் 5 பேர் உட்பட புதிதாக 30 பேருக்குக் கிருமித்தொற்று

(PHOTO: TODAY)

சிங்கப்பூரில் இன்றைய (டிச.31) நிலவரப்படி, புதிதாக 30 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்களில், 5 சமூக அளவில் பதிவாகியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் சமூக அளவில் பதிவான அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்று இதுவாகும்.

சென்னை-சிங்கப்பூர் இடையே இருவழி பயணம் மேற்கொள்ள கூடுதல் விமானங்கள்!

கடைசியாக ஆகஸ்ட் 30 அன்று சிங்கப்பூரில் 8 சமூக அளவிலான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமூக பாதிப்புகள்

அந்த சமூக பாதிப்புகளில் 2 பேர் முன்னர் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆவார்கள். மேலும், 3 பேர் தொற்று உறுதிசெய்யப்பட்ட துறைமுக விமானியின் (harbour pilot) குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

புதிய சம்பவங்களில், 25 பேர் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள், அவர்கள் இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்களில், 5 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள், 9 பேர் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் யாரும் புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கவில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இந்த புதிய பாதிப்புகளுடன் சேர்த்து, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 58,599ஆக உள்ளது.

ஜனவரி முதல் சிங்கப்பூர் வரும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு கட்டாயம்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…