குறைந்த விலைக்கு போன், அளவில்லா அழைப்புகள், S$5/மாதத் திட்டம் போன்ற மோசடி குறித்து போலீஸ் எச்சரிக்கை

SPF

போலி பேஸ்புக் விளம்பர மோசடி குறித்து சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) எச்சரிக்கை செய்துள்ளது.

இந்த மோசடியில், கடந்த செப்டம்பர் முதல் குறைந்தது 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக SPF கூறியுள்ளது.

சிங்கப்பூரில் தாங்கமுடியாத அளவுக்கு வெப்பம் வாட்டுகிறதா? இதோ நல்ல செய்தி

சமீபத்திய iPhones மாடல் போன்று புதிய கைபேசிகளை மோசடியில் விற்பனை செய்தது குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பரிந்துரைக்கப்பட்ட விலைக்குக் குறைவான விலையில் புதிதாக வெளியிடப்பட்ட இந்த மின்னணு சாதனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் சமூக ஊடக பதிவுகள் அல்லது பேஸ்புக் விளம்பரங்கள் மோசடிக்காரர்களிடம் இருந்து இடம்பெறும்.

அதுபோன்ற பதிவுகளை கண்டு பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றம் அடைந்ததாக SPF தெரிவித்துள்ளது.

அதன் பேஸ்புக் விளம்பரங்களின் ஸ்கிரீன் ஷாட்களைக் பொதுமக்கள் பார்வைக்கு SPF பகிர்ந்துள்ளது.

பொய்யான சலுகை, வரம்பற்ற இணைய அழைப்பு மற்றும் S$5/மாதத் திட்டங்கள் போன்ற சிறப்புகளுடன் விற்கப்படும் இந்த சாதனங்களை கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் SPF கேட்டுக்கொண்டுள்ளது.

எப்படி ஏமாற்றுகின்றனர்?

போலியான அந்த விளம்பர லிங்க்கை கிளிக் செய்தவுடன், அது அவற்றை விற்பனையாளர்களின் இன்-ஆப் மெசஞ்சர் அல்லது வாட்ஸ்அப் வழி திருப்பிவிடும்.

பின்னர் அந்த உரையாடலின் போது, ​​விற்பனையாளர்கள் குறைவான கையிருப்பு இருப்பதாகக் கூறி, முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும் என கோருவார்கள்.

அதன் பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை யாரென்று தெரியாதவர்களுக்கு தம்முடைய வங்கி கணக்குகளில் இருந்து அனுப்புவர்.

இறுதியாக, முன்பதிவு செய்த பொருளைப் பெறமுடியாமல் மற்றும் விற்பனையாளரை தொடர்பு கொள்ள முடியாதபோதும், ​​தாம் மோசடி செய்யப்பட்டுள்ளதை அவர்கள் உணருவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜூரோங்கின் புதிய தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்கள் கவலை!