சிங்கப்பூர் பொங்கல் கொண்டாட்டம்; பொங்கலுக்கான சிறந்த நேரம் எவை?

Pongal celebration At Singapore

Pongal celebration in Singapore : உலகெங்கும் வாழும் தமிழர்களால் கவலை மறந்து இன்முகத்துடனும் மகிழ்வுடனும் ஆனந்தமாய் கொண்டாடப்படும் தமிழர்களின் திருநாள் இந்த பொங்கல் நன்னாள். இது தை மாதம் முதல் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூரில் இந்த பொங்கல் திருநாள் மிகச்சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாப்படும், இதில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி அந்நாளை வெகு விமர்சையாக சிறப்பிப்பார்கள்.

மேலும் LISHA சார்பாக பொங்கல் ஒளியேற்றும் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் ஆரம்பம் ஆகியுள்ளது, இதில் லிட்டில் இந்தியா வண்ணமிகு ஒளி அலங்காரங்களால் கண்ணுக்கு விருந்தாய் அமைந்துள்ளது.

ஜனவரி 10 முதல் ஜனவரி 18 வரை பொங்கல் ஹெரிடேஜ் கார்னிவலில் உள்ள கால்நடை பண்ணைக்கு வந்து மாடுகளை நீங்கள் பார்வையிடலாம் என்று LISHA தெரிவித்துள்ளது.

Photo : LISHA

தமிழர்களின் திருநாளான பொங்கலுக்கு, “சிங்கப்பூர் பொங்கல்” என்ற பாடல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிங்கப்பூரில் பொங்கலுக்கான மங்களகரமான சிறந்த நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது, அவை:

  • காலை 6 மணி முதல் 8.30 மணி வரை
  • காலை 10 மணி முதல் 12 மணி வரை
  • மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை