பொங்கல் பண்டிகையையொட்டி, கோலாகலமாகத் தொடங்கியது ஒளியூட்டு!

Photo: LISHA

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் இந்திய மரபுடைமை நிலையம் இணைந்து ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை வெகுவிமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டில் வரும் ஜனவரி 14- ஆம் தேதி அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையின் தொடக்க நிகழ்வான ஒளியூட்டு நேற்று (08/01/2022) தொடங்கியது. பிப்ரவரி மாதம் வரை ஒளியூட்டு நடைபெற உள்ளது. ஒளியூட்டு என்பது மாலையில் வண்ணமின் விளக்குகளை ஒளிரச்செய்வது ஆகும்.

பிரம்படி வாங்கத் தயாரா..? சிங்கப்பூரில் வெளிநாட்டு பணியாளர்கள் இந்த தவறை செய்தால், 2000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதம்!

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அமைச்சர்கள் எஸ்.ஈஸ்வரன் மற்றும் ஆல்வின் டான் ஆகியோர் குத்துவிளக்கேற்றி ஒளியூட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். அத்துடன் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்.

அதேபோல், அங்கு அமைக்கப்பட்டுள்ள பொங்கல் பண்டிகையை விளக்கும் கண்காட்சிகள், பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பண்ணையில் உள்ள பசுக்கள் ஆகியவையை அமைச்சர்கள் பார்வையிட்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சிறப்பு அழைப்பாளர்கள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். எனினும், பொதுமக்கள் வீட்டிலிருந்த படியே நிகழ்ச்சியைக் காணும் வகையில் சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த 1,364 நட்சத்திர ஆமைகள் – சோதனையில் பறிமுதல்

நிகழ்ச்சியில் அமைச்சர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர் இந்திய மரபுடைமை நிலையத்தின் நிர்வாகிகள்.

இந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக அவர்கள் இந்திய மரபுடைமை நிலையத்தின் இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு – ஜன. 9 முதல் நடைமுறை!

மற்றவர்கள் நிகழ்ச்சிகளை காணொளி மூலம் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒளியூட்டு தொடங்கியுள்ளதால், லிட்டில் இந்தியா விழாக்கோலம் பூண்டுள்ளது.