“தொற்றுநோய் வேலையிடத்தை மாற்றி, ஊழியர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது”

Job hire more foreign workers School bus operators spore
(Photo: Overseas Foreign Workers in Singapore/FB)

கோவிட் -19 தொற்றுநோய் வேலையிடத்தை வியத்தகு முறையில் மாற்றியுள்ளது என்றும், அலுவலக ஊழியர்களுக்கு பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

ஆனால், அவர்களைத் தக்கவைத்துக்கொள்ள தொழிலாளர் கொள்கைகளில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் லாரிகளில் சோதனை – குற்றங்கள் கண்டுபிடிப்பு

வீட்டிலிருந்து வேலை நடப்பதால், பெண்களுக்கு அதிக தேர்வுகள் இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வீட்டில் கவனிப்பு பொறுப்புகளா அல்லது வேலைக்கு செல்லவதா என்ற இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியதில்லை, என்று அவர் தனது தனது மே தின செய்தியில் கூறினார்.

குறைபாடுகள் உள்ள ஊழியர்கள், மீதமுள்ள ஊழியர்களிடம் இருந்து தாம் ஒரு விதிவிலக்கு என்று பயப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு தொழிலாளர் தினம் கோவிட் -19 நடவடிக்கைகளுடன் இக்கட்டாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ள திருவாட்டி ஹலிமா, சிங்கப்பூரின் தடுப்பூசி திட்டம் சீராக நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டார்.

ஜுராங்கில் வேன் விபத்தில் சிக்கிய 4 பேர் தீக்காயங்களுடன் மருத்துவனையில் அனுமதி