வேலை ஆதரவுத் திட்டம் நீட்டிப்பு – புதிய தரமான வேலைகளை உருவாக்க அதிக நேரம் கொடுக்கும்..!

president halimah yacob said about JSS
(Photo Credit: Nuria Ling/TODAY)

இந்த ஆதரவு தொகுப்பின் முக்கிய கூறுகளில் ஒன்று, அடுத்த ஆண்டு மார்ச் வரை ஊதியங்களை ஈடுசெய்யும் வேலை ஆதரவு திட்டத்தின் (JSS) நீட்டிப்பு ஆகும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இந்த JSS நீட்டிப்பு முக்கியமானது என்றும், ஏனெனில் இது பலவீனமான பொருளாதார சூழலுக்கு மத்தியில் வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில்
குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் மவுண்ட்பேட்டனில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து..!

ஒவ்வொரு வர்த்தகத்தையும் காப்பாற்ற முடியாது என்பதைச் சுட்டி காட்டிய அவர், அடுத்த சில மாதங்களில் இன்னும் அதிக வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்றும், மேலும் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வேலை ஆதரவுத் திட்டம் நீட்டிப்பு, புதிய தரமான வேலைகளை உருவாக்க அதிக காலம் இருப்பதை உறுதிசெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Last week, DPM Heng Swee Keat briefed me and the Council of Presidential Advisers on the Government’s proposal to…

Posted by Halimah Yacob on Monday, August 17, 2020

இந்த திட்டம் நீட்டிப்பு, ஆள்குறைப்பு நடவடிக்கைகள் திடீரென அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கும் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலை ஆதரவுத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு..!

இதையும் படிங்க : தமிழகம் செல்லும் விமானங்களின் அப்டேட் – சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் அறிவிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg