அனைத்து அன்னையருக்கும் “அன்னையர் தின” வாழ்த்து கூறிய பிரதமர் லீ..!

Prime Minister Lee greets "Mother's Day"
Prime Minister Lee greets "Mother's Day"(Photo courtesy: pmo.gov.sg)

வீட்டிலிருந்து பல்வேறு பணிகளை செய்து வரும் அன்னையருக்கு, பிரதமர் லீ சியென் லூங் தமது அன்னையர் தின வாழ்த்துகளை தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்களுடைய வழக்கமான வேலைகளுக்கு மத்தியிலும், வீட்டு வேலை, சமையல், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உந்துசக்திகளாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதாக திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 256 நபர்கள் COVID-19 தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்..!

அனைத்து தாய்மார்களின் முயற்சிகளும், சில சமயங்களில் உணரப்படவில்லை என்றாலும் அவை பெரிதும் பாராட்டப்படுகின்றன என்பதை மனதில் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

For mummies who have been working from home, the distinction between work and home has blurred. They are multitasking as…

Posted by Lee Hsien Loong on Saturday, May 9, 2020

 

COVID-19 காரணமாக கொண்டாட்டங்கள் தற்போது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது பெரிய குடும்பங்கள் ஒன்றுகூடமுடியவில்லை என்றாலும், இணையம் வழி கொண்டாட்டங்கள் அல்லது ஆக்கப்பூர்வமாக வழிகளில் உங்களின் அன்னையரை ஆச்சரியப்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என்றும் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

அனைத்து தாய்மார்களுக்கும், தாய்மார்களாக ஆக இருப்போருக்கும் பிரதமர் லீ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம்..!