ஆசியான்-அமெரிக்க சிறப்பு உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்காவுக்கு செல்கிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

(PHOTO: MCI)

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், ஐந்து நாள் பயணமாக நாளை (10/05/2022) அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

மகளை கொடூரமாகத் தாக்கி மரணம் ஏற்படுத்திய தந்தைக்கு சிறை, 12 பிரம்படி – சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆசியான்-அமெரிக்க சிறப்பு உச்சி மாநாட்டில் (ASEAN-US Special Summit) கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங, நாளை (10/05/2022) அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு (Washington D.C.) பயணம் மேற்கொள்கிறார். நாளை (10/05/2022) முதல் மே 14- ஆம் தேதி வரை பிரதமர் அங்கு பயணம் மேற்கொள்கிறார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் பிற ஆசியான் தலைவர்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்து பேசவிருக்கின்றனர். அவர்களுக்கு வரும் மே 12- ஆம் தேதி அன்று அமெரிக்கா அதிபர் இரவு விருந்து அளிக்கிறார். அதைத் தொடர்ந்து, மே 13- ஆம் தேதி அன்று அமெரிக்க அதிபர் ஆசியான் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.

இந்தியாவில் வசூலை அள்ளிக்குவித்த பிரபல படத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை! வெளியான காரணம்!

தற்போதைய ஆசியான்- அமெரிக்க மூலோபாய கூட்டாண்மையை தலைவர்கள் விரிவான மதிப்பாய்வு செய்வார்கள் மற்றும் எதிர்காலத்திற்கான ஆசியான்- அமெரிக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிப்பார்கள். ஆசியான் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கவுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபருக்கும், ஆசியான் தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது சிறப்பு உச்சி மாநாடு இதுவாகும். கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 9வது ஆசியான்- அமெரிக்க உச்சிமாநாட்டில் கலந்துக் கொண்டார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் பிற ஆசியான் தலைவர்களுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மதிய உணவையும், அமெரிக்க நாடாளுமன்ற தலைவர்களுடன் மதிய உணவையும் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி (US Speaker of the House Nancy Pelosi) வழங்குகின்றன.

இனி சிங்கப்பூரில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கப்படாது! மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றம் என்ன?

பிரதமர் லீ சியன் லூங் உடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகத்தின் உயரதிகாரிகளும் வாஷிங்டனுக்கு செல்லவிருக்கின்றனர்.

சிங்கப்பூர் பிரதமர் இல்லாத நேரத்தில், மூத்த அமைச்சரும், தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹீன் (Teo Chee Hean, Senior Minister and Coordinating Minister for National Security) தற்காலிக பிரதமராக (Acting Prime Minister) செயல்படுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.