சிங்கப்பூரின் வடகிழக்கில் உள்ள தீவில் 90% பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்!

Pulau Ubin covid vaccine
Pic: NParks

சிங்கப்பூரின் வடகிழக்கில் உள்ள புலாவ் உபின் (Pulau Ubin) என்ற தீவிற்கு கடந்த மாதம் COVID-19 தடுப்பு மருந்துகள் கொண்டு செல்லப்பட்டு, தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.

COVID-19 தடுப்புமருந்துகள் கடந்த மாதம் (ஜூலை 2) புலாவ் உபின் தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

கடல் தாண்டிச் சென்று, மக்களுக்கு தடுப்பூசிகளைக் கொண்டு சேர்க்கும் சுகாதார ஊழியர்களுக்கு சுகாதார அமைச்சர் ஓங் நன்றியைத் தெரிவித்தார்.

புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாதவர்களின் ‘பெர்மிட்’ அல்லது ‘பாஸ்’ ரத்து செய்யப்படலாம்

புலாவ் உபின் தீவில் உள்ள மூத்தோரைப் பராமரிக்கும் ஊழியர்களுக்கும் தீவிலுள்ள மற்ற சில முன்னிலை ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டது.

இந்நிலையில், புலாவ் உபினில் வசிப்போரில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

அந்தத் தீவில் வசிக்கும் பெரும்பாலனோர் படகில் சிங்கப்பூருக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மூத்தோர் சிலருக்கு அவர்களுடைய வீட்டுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டது.

இருப்பினும், புலாவ் உபின் தீவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூத்தோர் சிலர் இன்னும் புலாவ் உபினில் உள்ளதாகவும், அவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தினம் 2021: வண்ண விளக்குகளால் ஒளிரும் சிறப்புவாய்ந்த கட்டிடங்கள்.!