சிங்கப்பூரின் வடகிழக்கில் உள்ள தீவிலும் COVID-19 தடுப்பூசிகள் போடும் பணி.!

Pulau Ubin vaccinate residents
Pic: Ong Ye Kung/FB

சிங்கப்பூரின் வடகிழக்கில் உள்ள புலாவ் உபின் (Pulau Ubin) என்ற தீவிற்கு COVID-19 தடுப்பு மருந்துகள் கொண்டு செல்லப்பட்டு, தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றன.

COVID-19 தடுப்புமருந்துகள் நேற்று (02-07-2021) காலை புலாவ் உபின் தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடல் தாண்டிச் சென்று, மக்களுக்கு தடுப்பூசிகளைக் கொண்டு சேர்க்கும் சுகாதார ஊழியர்களுக்கு சுகாதார அமைச்சர் ஓங் நன்றியைத் தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

புலாவ் உபின் தீவில் உள்ள மூத்தோரைப் பராமரிக்கும் ஊழியர்களுக்கும் தீவிலுள்ள மற்ற சில முன்னிலை ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டது.

புலாவ் தீவில், நடமாடுவதில் சிரமமுள்ள வயதானோர் மூன்று பேருக்கு சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி போட்டதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளத வயதானோர்கள் இருந்தால், அவர்களிடம் தடுப்பு மருந்து குறித்து எடுத்துக்கூறி அவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்குமாறு சுகாதார அமைச்சர் ஓங் கேட்டுக்கொண்டுள்ளார்.

WWE மல்யுத்த போட்டி: சிங்கப்பூரிலிருந்து களமிறங்கிய முதல் மல்யுத்த வீரர்.!