வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்குள் ரமலான் தொழுகைக்கு அனுமதி

(Photo: Kirsten Han)

ரமலான் மாதத்தைக் கடைப்பிடிக்கும் முஸ்லீம் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்குள் கூட்டு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, தங்கும் விடுதி ஆபரேட்டர்கள் இதற்கான அனுமதிகளை வழங்குவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்காத முதலாளிகளுக்கு தண்டனை..!

ரமலான் மாத தராவீஹ் தொழுகையும், நோன்பு பெருநாள் தொழுகையும் நடைபெறும் என்று மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது.

இதற்கான அனுமதியை ஆபரேட்டர்கள் MOMன் கீழ் செயல்படும் ACE குழுமம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த தொழுகைகள் விடுதியில் உள்ள அரங்குகள் அல்லது பொதுவான அறைகள் போன்ற இடங்களில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இரண்டு அமர்வுகள் அனுமதிக்கப்படும்.

சிங்கப்பூரில் புதிதாக நான்கு சுற்றுலாத் தளங்களை அறிமுகம்.!