ரெட்ஹில் வட்டாரத்தின் இந்த பிளாக்களில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை.!

Redhill residents seven blocks
Pic: Google Maps

சிங்கப்பூரில் உள்ள ரெட்ஹில் பகுதியில் கிருமித்தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், அங்குள்ள அதிகமான குடியிருப்பாளர்களிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரெட்ஹில் வட்டாரத்தில் கிருமிப்பரவல் சாத்தியங்கள் தென்படுகின்றன, மேலும் கழிவுநீர் மாதிரிகளில் கிருமிக்கூறுகள் தென்பட்டதையடுத்து கட்டாய சோதனைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று முதல் உணவகங்களில் குழுவாக இருவர் அமர்ந்து சாப்பிட அனுமதி – விதிமுறைகள் என்னென்ன?

ரெட்ஹில் லேனிலுள்ள (Redhill Lane) Black 81, 82, 83 ரெட்ஹில் Close-ல் உள்ள 87, 88, 89, 90 ஆகிய Black-களில் வசிப்போருக்கு இன்று (ஜூன் 21) முதல் புதன்கிழமை (ஜூன் 23) வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இடங்களுக்கு சென்றிருந்தோர்களும், குடியிருப்பாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களும், கிருமித்தொற்று பரிசோதனைகளை செய்ய விரும்பினால், அதே நாட்களில் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

குடியிருப்பாளர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், குறுஞ்செய்தி வழியாகவும் மேல் விவரங்கள் தெரிவிக்கப்படும் என சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

DBS வங்கியில் இருமுறை பணம் கழிக்கப்பட்ட சம்பவம்; பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணம் மீண்டும் வரவு.!