சிங்கப்பூரில் இன்று முதல் உணவகங்களில் குழுவாக இருவர் அமர்ந்து சாப்பிட அனுமதி – விதிமுறைகள் என்னென்ன?

Pic: Google Maps

சிங்கப்பூரில் உணவகங்கள் மற்றும் பானக் கடைகளில் இன்று (21-06-2021) முதல் இரு நபர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், 2 நபர்களுக்கு மேல் ஒரே மேசையில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. மேசையில் அமர்ந்து சாப்பிடும் 2 நபர்கள் வெவ்வேறு குடும்பத்தை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்.

உணவகங்கள் மற்றும் பானக் கடைகளில் வாடிக்கையாளர்களின் அடையாள அட்டைகள் சோதனை செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்ற சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இருவர் இருவராகப் பல மேசைகளில் அமர்ந்து உணவு சாப்பிடுகிறார்களா என்பதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் பானக் கடைகளில் அமர்ந்து சாப்பிடுவோர் 1 மீட்டர் இடைவெளியைப் கடைபிடிக்க வேண்டும், சாப்பிடும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

உணவகங்களில் சத்தமாக பேசுவதற்கும், இசையை ஒலிக்க விடுவதற்கும் அனுமதி இல்லை. அந்த இடங்களில் காணொளிகளைக் காட்டுவதற்கும், நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்று பரவல் குறைந்து, நிலைமை மேம்பட்டால் அடுத்த மாத நடுப்பகுதியிலிருந்து அதிகபட்சம் ஐந்து பேர் வரை குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணங்கள் மீண்டும் தொடங்க அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்; சுகாதார அமைச்சர்.!