முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட தகுதியை இழக்கும் அபாயத்தில் உள்ள 31,500 பேர்!

Photo: Getty

சிங்கப்பூரில் சுமார் 31,500 தகுதியான நபர்கள் தங்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதற்கு இன்னும் பதிவு செய்யாததால், பிப். 14ஆம் தேதியில் இருந்து அவர்கள் ​​முழுத் தடுப்பூசி போட்ட நிலையை இழக்க நேரிடும்.

சிங்கப்பூரில், கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம்.

சிங்கப்பூரில் பால் பவுடர் வாங்கியவருக்கு அடித்த அதிஷ்டம்… குலுக்கலில் S$88,888 ரொக்கப் பரிசை தட்டி சென்றார்!

அவர்களின் 2 டோஸ் தடுப்பூசிக்கு பிறகு 270 நாட்களுக்குள் mRNA தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போது தான் பிப். 14 முதல் அவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகக் கருதப்படும்.

அவ்வாறு செய்யாத நபர்கள், பிப்ரவரி 14 முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கருதப்பட மாட்டார்கள் என்று MOH தெரிவித்துள்ளது.

அவர்களின் தடுப்பூசி நிலை “கூடுதல் டோஸ் தேவை” என்ற நிலைக்கு மாற்றப்படும் என்றும் MOH கூறியுள்ளது.

அனைவருக்கும் தடுப்பூசி நினைவூட்டல் செய்தி அனுப்பப்படுகிறது, மேலும் அவர்கள் நேரடியாக தடுப்பூசி நிலையங்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை… “S$16 மில்லியன் ஜாக்பாட்” – Hong Bao டிரா!