உட்லண்ட்ஸில் கைப்பையை கொள்ளையடித்த வெளிநாட்டவர் கைது – 12 பிரம்படிகள்?

man arrested after allegedly robbing woman of S$10 in Woodlands
SPF, MAS, Humberto Portillo/ Unsplash

சிங்கப்பூரில் பெண் ஒருவரின் கைப்பையை கொள்ளையடிக்க முயற்சி செய்த சந்தேகத்தின் பேரில் 48 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த கைப்பையில் வெறும் S$10 வெள்ளியும், சில இதர பொருட்கள் மட்டுமே இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

வேலையிடங்களுக்கு அருகிலேயே இரவு முழுவதும் உறங்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.. லாரி பயணத்துக்கு மாற்றா? கொதிக்கும் நெட்டிசன்கள்

இந்த சம்பவம் உட்லண்ட்ஸ் அவென்யூ 7 இல் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 30 வயதுமிக்க பாதிக்கப்பட்ட பெண், சம்பவம் நடந்த 10 நிமிடங்களில் போலீசில் புகார் செய்தார்.

அதன் பின்னர் கேமராக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸ் அவரின் அடையாளங்களை கண்டறிந்தது.

அவர் 40 வயதுமிக்க சீன நாட்டவர் என்றும், புகாரளித்த 24 மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கைப்பையும் மீட்கப்பட்டது.

ஆடவர் மீது நேற்று முன்தினம் ஆகஸ்ட் 22 அன்று கொள்ளைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகளில் இருந்து 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.

மேலும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

இடி, மின்னலுடன் கனமழை.. குடை பிடித்து 21வது மாடியில் வேலை பார்க்கும் ஊழியர் – கவலை கொள்ளும் நெட்டிசன்கள்